« அறிவிப்பு | HomePage | கதைமொழி - மனக்கூத்து - தமிழ்நதி »

March 20, 2007

கவிமொழிகள் - நவீன்பிரகாஷ், விஷி, செந்தில்






medium_1.jpg
முத்தக் காட்டேரி!

நீ....

நீ அழகானவள்
சிணுங்கும்போது
மிக அழகாக இருக்கிறாய்

நீ திட்டும்போது கூட
எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி
திட்டுவது எனக்கு
பிடிக்கிறது தெரியுமா ?

என் கோபத்தை
அழகாக
உறிஞ்சி எடுக்கும்
முத்தக்காடேரி நீ !

நீ திட்டும்போது கூட
எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி
திட்டுவது எனக்கு
பிடிக்கிறது தெரியுமா ?

நவீன் ப்ரகாஷ்

*


மரம்-ரணம்-மணம்!

நம் அன்பு உலகில் ஒரு 'மரம்'
வீழ்ந்தால்?
'மரணம்'
மரணம் ஒரு 'ரணம்'.
நெஞ்சைப் பிளந்து கசக்கிப்
பிழிந்து உருக்கித்
திருகுவதால் ரணம்
மரணம் என்றென்றும் 'ரணம்'.

நம் அன்பு உலகில் ஒரு 'மரம்'
வீழ்ந்தால்?
'மரணம்'
மரணம் ஒரு 'மணம்'
எவருக்கும் தொல்லையின்றி
உடனடி இறையடி சரணம்
அடைவதால் மணம்
மரணம் என்றென்றும் 'மணம்'.

விஷி

*
medium_2.jpg
medium_3.jpg


தேவதை!

ஒரு பங்குனியில் அடர்கானகம்
தாண்டிக்கொண்டிருந்த போது
வழி மறித்த தேவதை
வரம் தருகிறேன் என்றாள்

மறுத்து நடந்தவனின்
கண்களில் பின்பொரு நாள்
கோவில் வாசல் பிச்சைக்காரியின்
முகத்தில் தெரிந்தாள் தேவதை

செந்தில்

*

14:25 Posted in கவிதை | Permalink | Comments (4) | Trackbacks (0) | Email this

Trackbacks

The URL to Trackback this post is: http://valaimozhi.blogspirit.com/trackback/1225747

Comments

கவிதை நல்லாயிருக்கு நவீன், வித்தியாசாமான கான்செப்ட்

கார்த்திக்

Posted by: karthick | March 23, 2007

எங்கள் கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்..

how to sent poem to valaimozhi..?

தொடுவானச்சாலையில்
நடைபோகிறேன்
என்று சொல்லியிருந்தால்

நட்சத்திரங்களை
அப்புரப்படுத்தியிருப்பேன்

பார்!
உன் ஒளியை திருடிக்கொண்டு
எப்படி ஜொலிக்கிறதென்று.

Posted by: thottarayaswamy | December 03, 2007

கவிதை
அருமை
அன்புடன்
மணிகண்டன்

Posted by: manikandan | April 14, 2008

ரசித்தேன். இன்னும் நிறைய படைப்புக்களை வெளியிட்டு, வாசகர்களுக்கும் வாய்ப்பளியுங்கள்.

> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

Posted by: கிரிஜா மணாளன் | May 07, 2008

Post a comment